12th Tamil Unit 4 Guide - Book back Question and answer guide

12th Tamil Unit 4 Guide - Book back Question and answer guide

இலக்கணத்தேர்ச்சி கொள்

1.வெண்பாவிற்கு ஏற்ப அடுத்த சீர் என்னவாக அமைக்கலாம்?பொருத்தமான சீர் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புங்கள்:-

அ) அன்பே தகளியாய் (ஆர்வமாய் / தகளியாய்) 

ஆ)வான்மழை தூறலில் (தூறலில் /பொழிந்திடும்)

இ)கண்ணிரண்டும் இல்லார் (இலாதார் இல்லார்) 

ஈ)வெண்ணிலவு காய்கிறது (காய்கிறது / ஒளிர்கிறது)

உ)வெய்யோன் ஒளிர்ந்திட (காய்ந்திட / ஒளிர்ந்திட)

******************************************

2.மூன்றாவது சீர் அமைத்து எழுதுக 

அ) கல்வி கரையில கற்பவர்

ஆ) கல்லாரே ஆயினும் கைப்பொருள்

 இ) நல்லவை செய்யின் நலமே

ஈ)அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் 

உண்ணாது நோற்பார் பெரியர்

******************************************

3. பொருத்துக 

1.2
அ) மாச்சீர்1)கருவிளம், கூவிளம்.
ஆ) காய்ச்சீர்2. நாள், மலர்.
இ) விளச்சீர்3) தேமாங்காய், புளிமாங்காய் -
ஈ)ஓரசைச்சீர்44) தேமா, புளிமா


அ) 1, 2, 4, 3

இ) 2, 3, 1, 4

ஆ) 4, 3, 1, 2 

ஈ) 3, 4, 2, 1

விடை : ஆ) 4, 3, 1, 2

******************************************

4.கீழுள்ள சொற்களை ஈற்றுச் சீராகக் கொண்டு குறள் வெண்பா / நேரிசை வெண்பா/ இன்னிசை வெண்பா எழுத முயற்சி செய்யவும்.

 கடல், வாள், மழை, தேன், மரம்

கடல்

கண்ணில் இனிக்கும் மகிழ்ச்சி உருவாய் மயக்கம் தருமே கடல்.

வாள்

பகையை ஒழிக்கும் படைவீரன் கையில் ஒளிருமே மின்னலாய் வா

மழை

துன்பங்கள் போலத் தொடர்ந்து பெய்தாலும் என்றும் இனிமை மழை

தேன்

எல்லாச் சிறப்பையும் ஈந்து உதவும் கல்விக்கு ஈடாமோ தேன்

மரம்

வெந்நீரைத் தந்தாலும் பன்னீராய் ஏற்று வளத்தில் சிறக்கும் மரம்

******************************************

5. வெண்பாவிற்கு உரிய தளைகள் யாவை?

 *வெண்பாவிற்குரிய தளைகள் 

இயற்சீர் வெண்டளை

வெண்சீர் வெண்டளை

******************************************

6.ஒரு விகற்பம், பல விகற்பம் என்றால் என்ன?

ஒரு விகற்பம்

        வெண்பாவில் நான்கு அடிகளும் ஒரே எதுகையைக் கொண்டிருந்தால் ஒரு விகற்பம் எனப்படும்.

பல விகற்பம்

         வெண்பாவில் முதலிரு அடிகளும் ஈற்று இரு அடிகளும் வேறுவேறு ஆ எதுகையைக் கொண்டிருந்தால் அது பல விகற்பம் எனப்படும் .

******************************************

கற்பவை கற்றபின்

1.கீழ்க்காணும் ஈற்றடிகளைக் கொண்டு நேரிசை(அ) இன்னிசை வெண்பா எழுது 

அ) என்றும் விரும்பியே கல்

    உன்னை உயர்த்தும் உலகு மறக்காது

    பொன்னை பொருளை புதுவாழ்வின்     

    நலங்கூட்டி நின்று நெடுவாழ்வு வாழ 

     வழிகாட்டும் என்றும் விரும்பியே கல்.

******************************************

ஆ) ஒழுக்கம் உயர்வு தரும்

  பழிக்குப் பழியென்ற பான்மை நமக்கு

 குழிபறிக்கும்  என்றாற் பிழையோ - அழகே

 விழிக்கு வெளிச்சம்போல் மேதினியில் யார்க்கும்

  ஒழுக்கம் உயர்வு தரும்

******************************************

இ)இன்னல் விலகி விடும்

கண்ணில் மலர்கின்ற காட்சிகள் 

ஒவ்வொன்றும் எண்ணத்திற் கன்றோ 

எழில்கூட்டும் வெண்ணிலவே தன்னை 

மறந்து தரணிக்குப் பாடுபட்டால்

இன்னல் விலகி விடும்

******************************************

ஈ) உழவின்றி உய்யா உலகு 

உணவின்றி உலகத்தில் ஓருயிரும் அமையா

கனவில் வருஞ்செல்வம் கைக்கு உதவா

குழந்தைக்குத் தாயின்றி கொண்டாட்டம் செல்லா

உழவின்றி உய்யா உலகு

******************************************

உ)மொழியின் வழியது அறிவு.

எத்தனையோ சொற்கள் இதயத்தில் இருந்தாலும்

அத்தனையும் அன்னைக்கு ஈடாமோ - மெத்த

கழிமகிழ்வு கொண்டாலும் கற்றவர்க்கு இங்கே

மொழியின் வழியது அறிவு.

******************************************

நம்மை அளப்போம்

1.பலவுள் தெரிக


1.காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை இத்தொடரில் 'கலன்' உணர்த்தும் பொருள்

அ) போர்க்கருவி

இ) இசைக்கருவி

ஆ) தச்சுக்கருவி

ஈ) வேளாண் கருவி

விடை : இ) இசைக்கருவி

******************************************

2. சுரதா நடத்திய கவிதை இதழ்

அ) இலக்கியம் இ) ஊர்வலம்

ஆ) காவியம் ஈ) விண்மீன்

விடை : ஆ) காவியம்

******************************************

3.விண்வேறு ; விண்வெளியில் இயங்கு கின்ற வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு- இத்தொடர் தரும் முழுமையான பொருள்:-

அ) விண்ணும் வெண்மதியும் வேறு வேறு

ஆ) விண்வெளியும் செங்கதிரும் வேறு வேறு

 இ) வெண்மதியும் முகிலும் வேறு வேறு

ஈ) விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர், முகில் அனைத்தும் வேறு வேறு

 விடை:ஈ) விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர், முகில் அனைத்தும் வேறு வேறு

******************************************

4. சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க :-

அ) வசம்பு

இ) கடுக்காய்

ஆ) மணத்தக்காளியிலைச் சாறு 

ஈ) மாவிலைக்கரி

விடை : இ) கடுக்காய்

******************************************

5.'குழிமாற்று' எந்தத் துறையோடு தொடர்புடைய சொல் 

அ) இலக்கியம் 

இ) புவியியல் 

ஆ) கணிதம்

ஈ) வேளாண்மை

விடை : ஆ) கணிதம்

******************************************

குறுவினா

1.இடையீடு - எவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது?

             இக்கவிதை, கவிஞரின் கவிதை சார்ந்த எண்ணம், அதனை வெளிப்படு வண்ணம், எழுதப்பட்ட கவிதையை உள்வாங்கும் வாசகனின் மனநிலை போன்றவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது.

******************************************

2. வசனம், கவிதை வேறுபாடு தருக

வசனம்

         சொற்களைப் பேசுகின்ற நேரத்தில் எதுகை மோனை சேர்க்காமல் அளவுகளை அறியாமல் அமைகின்ற வடிவம் வசனம் ஆகும்.

 கவிதை

      எதுகை, மோனை அடி அளவுகள் ஆகியன ஒன்றாக இணைந்து அமைகின்ற வார்த்தைகள் கவிதை ஆகும்.

******************************************

3.எத்திசையிலும் சோறு தட்டாது கிட்டும்' - யாருக்கு?

         கலைத்தொழிலில் வல்ல அனைவர்க்கும் இவ்வுலகில் எத்திசையில் சென்றாலும் அத்திசையில் உணவு, தவறாமல் கிட்டும் 

******************************************

4.அக்காலத்து கல்வி முறையில் மனனப் பயிற்சிக்கு உதவிய நூல்கள் எவை?

               தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதிநூல்கள் முதலியனவும், கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலி பலவகை வாய்பாடுகளும் அக்காலத்துக் கல்வி முறையில் மனனப் பயிற்சிக்கு உதவின.

******************************************

கூடுதல் வினா

1.பாடாண் திணை - விளக்குக ?

       ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளை சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணை ******************************************ஆகும்


2.பரிசில் துறை என்றால் என்ன?

     பரிசு வேண்டி வாயிலில் நிற்பது பரிசில் துறை என்று பெயர்.

******************************************

சிறுவினா

1.மூன்றான காலம் போல் ஒன்று - எவை? ஏன்? விளக்குக மூன்றான காலம் போல் ஒன்றானவை ?

எண்ணம்

வெளியீடு

கேட்டல்

விளக்கம்

               சொல்ல விரும்பிய கருத்துகளெல்லாம் சொற்களில் வருவதில்லை. விரும்பாத மாற்றங்களும், இலக்கை அடைய முடியாமல் ஏமாற்றங்களும் மனம் வருந்தக் காரணங்களாகின்றன. நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருக்கிறது. நினைப்பதும் நினைக்காததும் கலந்தும் நிகழ்கிறது. எலிக்குப் பொறி வைத்தால் நம் விரலே பொறியில் சிக்குவதுண்டு. நீருக்காக அலையும்போது சுவை மிகுந்த இளநீரும் கிடைக்கும், வானத்திற்கு வெளிச்சம் தரும் வால்மீனாக நாம் நினைத்தைப் பேச்சினில் கொண்டுவந்தாலும் புரிந்துகொண்டு கேட்பதாக சிக்கலாகிறது. கனியின் அவை கனியைப் பொறுத்து மட்டும், உண்போரின் பசியையும் நாவின் சுவை மொட்டுகளையும் சார்ந்தது         

            எண்ணம், வெளியீடு, கேட்டல் என்ற மூன்றும் எப்போதும் ஒன்றாக இருப்பது இல்லை. தனித்தனியாகத்தான் இருக்கும். இறந்தகாலம் கடந்தது; எதிர்காலம் கற்பனை நிகழ்காலம் மட்டும் உண்மை . இந்த மூன்று காலங்களும் எப்போதும் ஒன்றாக இருப்பது இல்லை, காலம் என்று குறிப்பிடும்போது மட்டும் ஒன்றாக இருக்கும். மற்றபடி தனித்தனிதான்.

         எண்ணம், வெளியீடு, கேட்டல் என்ற மூன்றும் எப்போதும் ஒரே கோட்டில் நன்றாக இணைவது இல்லை. எப்போதாவது மட்டும் ஒன்றாகக் காட்சி தரும் அதனால்தான் இந்த மூன்றையும் மூன்றான காலம்போல் ஒன்று என்று கவிஞர் சி.மன குறிப்பிடுகிறார்.

******************************************

2..நீங்கள் ஆசிரியரானால் மாணாக்கரை அன்பினால் எவ்வகையில் நெறிப்படுத்துவீர்கள்?

            *மாணவர்களிடம் பரிவுடனும் கனிவுடனும் நடந்து கொள்வேன். மாணவர்களிடம் எவ்வித வேறுபாடும் பார்க்காமல் நடுநிலையோடு செயல்படுவேன் .

*மாணவர்களிடையே குழு மனப்பான்மையை ஏற்படுத்துவார்.

*அறிவுரையும் வழிகாட்டுதலும் வழங்கி ஆற்றுப்படுத்துவது, மாணவர்களிடம் உள்ள தனித்திறமையைக் கண்டறிந்து ஊக்கப்படுத்தும்

*பொறுப்புகளைப் பகிர்ந்தளித்து, அனைவரும் மதிக்கப்படுகிறோம் என் எண்ணத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.

*அதீத குறும்பு செய்யும் மாணவனை வகுப்பு தலைவராக நியமித்து அவளை மனமாற்றம் செய்வேன்.

*மாணவனைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் தெரிந்து கொண்டு அவர்களின் நலன் சார்ந்த செயல்களை மேற்கொள்வேன் மாணவர்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பேன், 

******************************************

3.மணலில் எழுதியது முதல் தற்காலம் வரைமுறையில் ஏற்பட்டுள்ள  மாற்றங்களைத் தொகுத்துரைக்க;

 *பிள்ளைகள் முதலில் மணலில் எழுதிப் பழகுவார்கள்.

* அதனால் அவர்களுடைய எழுத்துகள் வரிசையாகவும் நன்றாகவும் அமையும்.

* உபாத்தியாயர் முதலில் தரையில் எழுத, அதன்மேல் பிள்ளைகள் விளம்பினார்கள்.

*பிறகு தாமே எழுதிப் பழகுவார்கள் எழுத்துகள் ஒன்றோடொன்று படாமல் வரி கோணாமல் பழைய காலத்தில் எழுதி வந்தார்கள் .

*எழுத்துகளின் உருவங்கள் பல காலமாக மாறாமல் இருந்து வந்தன .

*புள்ளி, கால், கொம்பு, விலங்கு முதலியவை வரி எழுத்தின் உறுப்புகள்.

*பெரியவர்கள் பழக்கி வந்த பழக்கத்தால் பலநூறு வருடங்களாகியும் எழுதும் வழக்கத்தில் பெரிய மாறுபாடுகள் ஏற்படவில்லை .

*. பனையேடு, சீதாளப்பத்திரம் முதலியவற்றில் எழுதுவது வழக்கமாகும்*

*ஓலையில் எழுதுவதற்குரிய பலவகை எழுத்தாணிகள் இருந்தன. ஒரு பக்கத்தில் மிக நுண்ணிய எழுத்துகளாக இருபது முப்பது வரி வரையில் எழுதுவதற்குரிய மெல்லிய எழுத்தாணிகள் இருந்தன.

*மாணாக்கர்களுக்கு எழுதும் பழக்கம் நன்றாக உண்டாகவேண்டும் என்று ஆசிரியர்கள் ஒவ்வொரு நாளும் அவர்களைத் தனித்தனியே ஏடுகளில் தாம் மேலே எழுதி அதனைப்போல் எழுதிவரச் சொல்வார்கள்.

*பிள்ளைகளுக்கு மணல்தான் சிலேட்டின் நிலையிலிருந்தது. பனையேடு தான் புத்தகம், எழுத்தாணியே பேனா..

*ஆசிரியர் மாணவர்களின் விரலைப் பிடித்து சிலேட்டில் எழுதக் கற்றுத் தருகிறார், பின்னர் ஆசிரியர் எழுதிய எழுத்துகளின் மீது மாணவர்கள் எழுதி எழுதிப் பழகுகிறார்கள்

*எழுது சுவடிகளில் ஆசிரியர் எழுத, அதன்மேல் மாணவர்கள் எழுதுகிறார்கள். பின்னர் தாங்களே எழுதிப் பழகுகிறார்கள்.

*பத்து விரல்களைப் பயன்படுத்தி கணிப்பொறியின் விசைப்பலகையில் தட்டச்சு மூலம் எழுதுகிறார்கள் தற்போது பேசப் பேச, திரையில் எழுத்தாக மாறும் வசதி உருவாகியுள்ளது ..

******************************************

4.வாயிலோயே எனத் தொடங்கும் ஒளவையார் புறநானூற்றுப் பாடல் பாடாண் திணைக்கு உரியது என்பதை நிறுவுக 

பாடாண் திணை விளக்கம்

        ஒருவனுடைய புகழ், வலிமை, கொடை,.அருள் போன்ற நல்லியல்புகளைச்

சிறப்பித்துக் கூறுவது பாடாண்திணை ஆகும்.

 சான்று

வாயிலோயே! வாயிலோயே எனத் தொடங்கும் ஔவையார் பாடல் நெடுமான் அஞ்சியின் கொடைச் சிறப்புக் கூறப்பட்டுள்ளது.

 விளக்கம்

              பரிசிலர்க்கு வாயிலை அடைக்காத வாயில் காவலனே ! அதியமான் தன்னுடைய தகுதியை அறியானோ ? அறிவும் புகழும் உடையோர் இவ்வுலகில் மாய்ந்துவிடவில்லை. தச்சனின் தொழில்வல்ல பிள்ளைகளுக்கு காட்டில் ஏதாவதொரு மரம் கிடைப்பது போல, கலைத்தொழில் வல்ல புலவர்களாகிய எங்களுக்கும் இவ்வுலகில் எந்த திசையில் சென்றாலும் அத்திசையில் உணவு தவறாமல் கிடைக்கும்.

பொருத்தம்

                 கலைத்தொழில் வல்ல புலவர் பெருமக்களுக்கு இவ்வுலகில் எத்திசையில் சென்றாலும் அத்திசையில் உணவு தவறாமல் கிடைக்கும் என்று புலவர்களின் அறிவாற்றலைப் பற்றி புகழ்ந்து கூறியுள்ளார். மேலும் 'பரிசிலர்க்கு அடையா வாயிலோயே' என்கிறார் ஔவையார். இதன நெடுமான் அஞ்சியின் கொடைச்சிறப்பு கூறப்பஉரியதாயிற்று. 

எனவே, வாயிலோயே என்ற ஔவையார் பாடல் பாடாண்திணை சேர்ந்ததுதான் என்று நிறுவப்படுகிறது

******************************************

கூடுதல் வினா


1.மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்

   மழுவுடைக் காட்டகத்து அற்றே 

எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே"- இவ்வடியில் பயின்று வரும் அணியை விளக்குக?

 மேற்கண்ட பாடல் அடிகளில் உவமை அணி பயின்று வந்துள்ளது

இலக்கணம்

               ஒரு பொருளை அதன் தன்மை கொண்ட மற்றொரு பொருளோடு ஒப்பிட்டுக் கூறுவது உவமை அணி எனப்படும்.உவம உருபு வெளிப்டையாக வரும்.

கருத்து

  மரம் வெட்டும் தச்சனின் தொழில் வல்ல பிள்ளைகள், கோடாரியுடன்

காட்டுக்குச் சென்றால் அவர்கள் வெட்டுவதற்கு ஏதாவது ஒரு மரம் கிடைக்காமலா போகும் ? அதுபோல, கலைத் தொழில் வல்ல எங்களுக்கும் இவ்வுலகில் எத்திசையிலும் உணவு தவறாமல் கிட்டும்.

பொருத்தம்

பரிசிலர்க்குச் சிறுவரும், கல்விக்குக் கோடரியும், போகும் திசைக்குக் காடும் உணவுக்குக் காட்டில் உள்ள மரங்களும் உவமைகள். உவமஉருபு அற்று.

******************************************

2.பாடாண் திணையை விளக்குக?

 திணை விளக்கம்

            ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் போன்ற நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது பாடாண் திணைக்கும்.

 சான்று

         வாயி லோயே வாயி லோயே! எனவரும் ஔவையார் பாடிய புறநானூற்றுப் பாடல் சான்றாகும்.

திணைப் பொருத்தம்

                 சிற்றரசனான அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் தரமால் காலம் நீட்டித்தது ஒளவையார் பாடியது. பரிசிலர்க்கு வாயில் அடைக்காத காவலனே என்ற வரிகள் அதியமானின் பரிசு நல்கும் பண்பை (கொடை) ஔவையார் இப்பாடலில் கூறியுள்ளதால் இப்பாடல் பாடாண் திணைக்கு உரியதாயிற்று.

******************************************

நெடுவினா


1.கவிதை எழுத அறிய வேண்டுவனவாகச் சுரதா கூறுவனவற்றை விவரிக்க?

*கவிதை எழுத அறிய வேண்டுவன . சொற்களை அமைக்கும்போது எதுகை, மோனை சேர்க்காமல், அடி அளவை அறியாமல் அமைகின்ற வடிவம் வசனம் ஆகும்.

*எதுகை, மோனை, இயைபு, முரண், சந்தம் முதலிய யாப்பிலக்கணம் நெறிகளுக்கு உட்பட்டு சொற்கள் அமைவது கவிதையாகும்.

*எழுத்துகள் தொடர்ந்து இருந்தால் அசைகள் வரும். அசைகள் சேர்ந்து சீர் வரும் .இரண்டு சீரின் இடைவெளியில் தளைகள் வரும்.

*தளைகள் தொடர்ந்து நடந்து அடிகள் அமையும். அடியின் கீழ் அடியிருந்தால் தொடைகள் வரும் .

*தொடை நயங்கள் நன்கு அமைந்திருந்தால் கவிதை வரும். இவற்றைத் தெரிந்து கொண்டு கவிதை எழுதத் தொடங்க வேண்டும்.

*மாவும் புளியும் மரத்தில் காய்க்கும். கவிதையின் சீர்களில் தேமாவும் புளிமாவும் நன்கு காணப்படும்.

*உரிய வடிவத்தில் எழுதாவிட்டால் தளைகள் பொருந்தாது. பாடலின் இறுதிச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாடுகளில் ஒன்றைக் கொண்டு முடியும் 

*செடியில் பூத்த பூமீது வண்டுவந்து அமர்வது போல நல்ல புலவர்களின் .பாடல்களில் புகழ் தங்கும்.

*எளிய மக்களுக்கும் விளங்குகின்ற வகையில் தமிழ்க் கவிதைகளைத் தரவேண்டும்

*நுணுக்கமாக ஆராய்ந்து எழுத்துகளை அறிந்து நம் முன்னோர்கள்போல் கற்றுவந்தால் அறம் பொருள்கள் உள்ளத்தில் தோன்றும். அறிவினிலே புகழ் விளையும்.

*இவற்றையெல்லாம் அறிந்துகொண்டு கவிதை எழுதுவோர்க்குப் புகழும் சிறப்பும் ஒருங்கே அமையும்.

******************************************

2.பண்டைக்காலக் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர்களுக்கிடையே நிகழ்ந்த கற்றல், கற்பித்தல் முறைகள் தொகுத்து எழுதுக?

வித்யாரம்பம்;

            முதன்முதலில் ஐந்தாம் வயதில் வித்யாப்பியாசம் செய்யும்பொழுது தாய் தந்தையர் பிள்ளைகளை ஆசிரியர்களிடம் அடைக்கலமாகக் கொடுத்து வந்தார்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடத்தில் சேர்க்கும் காலம் ஒரு விசேட நாளாக கொண்டாடப்பெறும்

முறை வைப்பது 

      ஏட்டின்மீது மஞ்சள் பூசி, பூசித்து பையனிடம் கொடுத்து வாசிக்கச் செய்வார்கள். உபாத்தியாயர் நெடுங்கணக்கைச் சொல்லிக் கொடுக்க மாணாக்கர் அதனைப் பின்பற்றிச் சொல்லுவான். இப்படி உபாத்தியாயர் ஒன்றைச் சொல்ல அதை மாணாக்கர்கள் பலரும் சேர்ந்து சொல்வதை 'முறைவைப்பது' என்று கூறுவார்கள். உபாத்தியாயருக்குப் பதிலாக சட்டாம்பிள்ளை முறை வைப்பதும் உண்டு 

மையாடல் விழா

                சுவடிகளில் உள்ள எழுத்துகள் செவ்வனே தெரிவதற்காக சுவடியில் வசம்பு மஞ்சள், மணத்தக்காளி இலைச்சாறு அல்லது ஊமத்தையிலைச்சாறு, மாவிலைக்கரி,தர்ப்பைக்கரி முதலியவற்றைத் தடவுவார்கள். அந்தமை எழுத்துகளை விளக்கமாகக் காட்டுவதோடு கண்ணுக்கும் குளிர்ச்சியைத் தரும். இங்ஙனம் மை தடவிய புத்தகத்தை வாசிக்கத் தொடங்குவதனால் 'மையாடல் விழா' என்று சொல்வார்கள்.

எழுதுதல்

        பிள்ளைகள் முதலில் மணலில் எழுதிப் பழகுவார்கள். அதனால் அவர்களுடைய எழுத்துகள் வரிசையாகவும் நன்றாகவும் அமையும். உபாத்தியாயர் முதலில் தரையில் எழுத அதன்மேல் பிள்ளைகள் விளம்புவார்கள். பிறகு தாமே எழுதிப் பழகுவார்கள்.

கையெழுத்து

         எழுத்துகள் ஒன்றோடொன்று படாமல் வரிகோணாமல் பழைய காலத்தில் எழுதி வந்தார்கள். பழைய ஏட்டுச் சுவடிகளைப் பார்த்தால் இது விளங்கும்.

எழுத்தின் வடிவம்

             புள்ளி, கால், கொம்பு, வடிவம் முதலிய வரி எழுத்தின் உறுப்புகளைப் பெரியவர்கள் பழக்கி வந்த பழக்கத்தால் பல நூறு வருடங்கள் ஆகியும் எழுதும் வழக்கத்தில் மாறுபாடுகள் ஏற்படவில்லை . 

மனனப்பயிற்சி

        அடிப்படையான நூல்கள் எல்லாம் மாணவர்களுக்கு மனனமாக இருக்கும் தமிழில் நிகண்டு, நன்னூல், காரிகை, தண்டியலங்காரம், நீதிநூல்கள் மனனமாக இருக்கும். கணிதத்தில் கீழ்வாயிலக்கம், மேல்வாயிலக்கம், குழிமாற்று முதலிய பலவகை வாய்பாடுகள் மனனமாக இருக்கும். அந்தாதி முறையைக் கொண்டும் எதுகை, மோனைகள் கொண்டும் செய்யுட்களை ஞாபகப்படுத்திக் கொள்வார்கள்.

அன்பினால் அடக்குதல்

           முற்காலத்தில் கொடிய தண்டனைகள் இல்லை. ஆசிரியர்கள் அன்பினால் மாணாக்கர்களை வழிப்படுத்தி வந்தார்கள். அவர்கள்பால் இருந்த மரியாதை பயத்தை உண்டாக்கியது. பிழைகளை மறந்து புரியாத நிலையில் அவர்கள் இருந்தார்.

வாதம் புரிதல்

           கல்வியில் வாதம் புரிதல் நம் நாட்டுப் பள்ளிக் கூடங்களில் இருந்தது. மிகச் சிறந்த நூற்பயிற்சி உடையவர்கள் அரசவைகளில் வாதம் புரிந்து தம் கல்வித் திறமைகளை நிலைநாட்டுவர்.

சாந்துணையும் கற்றல்

           பள்ளிக்கூடத்திலிருந்து கற்கும் காலம் கடந்த பின்னர், பழைய காலத்தவர்கள் பின்பும் எங்கெங்கே கலைகளைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் இருந்தார்கள், அங்கங்கே சென்று அவர்களிடம் தாம் முன்பு கல்லாதவற்றைக் கற்று வந்தார்கள் .

******************************************

3.சாலை விபத்தில்லாத் தமிழ்நாடு'-இக்கூற்று நனவாக நாம் செய்ய வேண்டியன யாவை?

*நம் நாடுதான் உலகிலேயே அதிக சாலை போக்குவரத்து வசதிகளைக் கொண்ட இரண்டாவது பெரிய நாடாகும். 

*ஏறக்குறைய 55 இலட்சம் கி.மீ. சாலைகள் உள்ளன.

* 21 கோடிக்கும் மேற்பட்ட ஊர்திகள் உள்ளன. தமிழ்நாடுதான் இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகமாக நடக்கும் மாநிலமாக உள்ளது.

சாலை விபத்தில்லா தமிழ்நாட்டை உருவாக்க நாம் பின்பற்ற வேண்டுவன

*வயது நிறைந்தவர்கள் மட்டுமே முறையான பயிற்சிகள் மூலம் ஓட்டு உரிமத்தைப் பெற்று மிகுந்த கவனத்துடன் வாகனத்தை இயக்க வேண்டும்

*இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் .

*இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைச் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் இருக்கைப் பட்டை யும் கட்டாயம் அணிய வேண்டும்.

*வாகன ஓட்டுநர்கள் வலப்புறமாகவோ, இடப்புறமாகவோ திருப்பும் முன்பு அதற்குரிய விளக்கினை எரியச் செய்ய வேண்டும்.

*கைப்பேசியில் பேசிக்கொண்டும், காதணிக் கேட்பிகள் பொருத்திக் கொண்டும் வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

*சாலையில் ஊர்தியைக் குறுக்கும் நெடுக்குமாக இயக்குவதும், போட்டிப் பந்தயம் எனச் சொல்லி பொது வழியில் உச்ச வேகத்தில் ஓட்டுவதையும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்

*தொடர்வண்டி இருப்புப்பாதைகள் மிகுந்த கவனத்துடன் கடக்க வேண்டும்

*சாலை குறியீடுகள், சாலையின் வகைகள், மைல் கற்களின் விவரங்கள் பற்றித் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

*போக்குவரத்து முறைப்படுத்தும் குறியீடுகள் மற்றும் போக்குவரத்துக் காவலர்களின் சாலை உத்தரவுகளுக்கு ஏற்பச் சாலையைப் பயன்படுத்த வேண்டும்.

*நடைமேடை, நடைபாதையைப் பயன்படுத்துபவர்களையும், சாலையைக் கடப்பவர்களையும் அச்சுறுத்தாமல் வாகனம் ஓட்ட வேண்டும் சாலைச் சந்திப்புகளில் எச்சரிக்கையான அணுகுமுறை தேவை.

*தேவையான இடங்களில் சரியான சைகையைச் செய்ய வேண்டும் எதிரில் வரும், கடந்து செல்ல முற்படும் ஊர்திகளுக்கு வழிவிட வேண்டும் தேவை எனில் வேகம் குறைத்து இதர வாகனங்களுக்குப் பாதுகாப்புடன் வழிவிட வேண்டும்.

*இதர சாலை பயானாளிகளை நண்பராக எண்ண வேண்டும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், சாலை விதிகள் மற்றும் விபத்துகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

*மனிதத் தவறுகளே மிகுதியான விபத்துகளுக்குக் காரணமாக அமைவது தவறுகளைத் திருத்திக்கொள்ளுதல், விதிகளைப் பின்பற்றுதல் வாயிலாக மட்டுமே சாலை விபத்துகளைத் தடுக்க முடியும்.

*சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு. சாலையில் வாகனம் பந்தயம் அல்ல; பயணம் மட்டுமே ஓட்டுவது.

*சாலை பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு பெறுவதன் மூலம் எதிர்காலத்தில் சாலை விபத்துகளே இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும்.

******************************************

தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.?

 எ.கா: நம் மானிலம் இந்த ஆண்டு வரட்சியால் பாதிக்கப்பட்டது .

*நம் மாநிலம் இந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டது.

******************************************

1. எங்கள் ஊரில் நூலகக் கட்டிடம் கட்ட அறசு நிதி ஒதுக்கீடு. .

*எங்கள் ஊரில் நூலக கட்டிடம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு

******************************************

2. ரங்கன் வெண்கலப் பாத்திரக்கடை வைத்திருக்கிறார் .

*அரங்கன் வெண்கலப் பாத்திர கடை வைத்திருக்கிறார்.

******************************************

.3. மானம் பார்த்த பூமியில் பயிர் வகைகள் பயிரிடப்படுகின்றன .

*வானம் பார்த்த பூமியில் பயிர் வகைகள் பயிரிடப்படுகின்றன.

******************************************

4. ஐப்பசி அடைமழையில் ஊருனி நிறைந்தது..

* ஐப்பசி அடைமழையில் ஊருணி நிறைந்தது

******************************************

5.இன்னைக்கு சாயங்காலம் கபடி போட்டி நடைபெறும்

*இன்று மாலை கபடி போட்டி நடைபெறும்.

******************************************

த.மிழாக்கம் தருக


          The Serious dearth of library facilities in this country is scarcely keeping with India's status in the international community of nations or with her educational and social needs. In this matter. India compares unfavourably not only with other independent Dominions of the commonwealth but even with certain British colonies. She possesses only one public library on any considerable size, and even this instit is inadequate to serve the need of the capital city. Only a few towns can boast of possessing any library at all. The rural population is completely neglected: There are no travelling libraries to reach them of kind that are to be found even some backward countries. The growth of libraries has lagged. Far behind the increase in the number of schools and the rise in the rate of literacy. The great mass of the people in India do not have the means to buy books or even magazines and newspapers; in the absence of sufficient public libraries and reading room, most of them cannot attain regular reading habits 

                கல்வி மற்றும் சமூக தேவையில் உலக அரங்கில் உள்ள நூலகத்தில் ஒப்பிடுகையில் இந்தியாவில் நூலக வளர்ச்சி மிகுந்த பற்றாக்குறையோடு அரிது வளர்ச்சியைக் கொண்டிருக்கிறது. இதில் மற்ற காலனி நாடுகளோடு பிரித்தானியா காலனி நாடுகளோடும் ஒப்பிடுகையில் விரும்பத்தகாத நிலையில் இந்தியாவின் நூலக வளர்ச்சி உள்ளது. குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு ஒரே ஒரு நூலகம் உள்ளது. அதுவும் நாட்டின் தலைநகரம் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாத நிலையில் உள்ளது. இந்தியாவின் சில நகரங்கள் மட்டுமே பெருமையோடு சொல்லத்தக்க நூலகத்தைக் கொண்டுள்ளன. நூலகம் கிராமப்புற மக்களை முற்றிலுமாக நிராகரித்துவிட்டது. பின் தங்கிய நாடுகளில் காணப்படுகின்ற நடமாடும் நூலகங்கள் கூட நமது கிராமப்புறங்களைச் சென்றடையவில்லை. பள்ளிகளிலும்கூட நூலக வளர்ச்சி பின்தங்கியுள்ளது. நூலக எண்ணிக்கையை அதிகரிக்காததால் படித்தோர் எண்ணிக்கை மிகவும் பின் தங்கியுள்ளது. பெரும்பான்மையான இந்திய மக்கள் புத்தகம், வார, மாத பத்திரிகைகள், செய்தித்தாள் வாங்கும் வழக்கம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் போதுமான நூலகம் மற்றும் வாசிப்பு அறை இல்லாததால் பெரும்பாலானோர் வாசிக்கும் வாய்ப்பை பெறமுடியாமல் இருக்கின்றனர்.

******************************************

சொல்லைப் பிரித்தும் சேர்த்தும் தொடர் அமைக்க


எ.கா: பலகை 

*பலகையால் ஆன மேசையில் உணவு உண்டனர்

*.பல கைகள் ஒன்றிணைந்து வெற்றியைத் தமதாக்கி

******************************************

1.தாமரை

*தாமரைகள் பூத்தால் குளத்துக்கு அழகு.

* தாமரைகள் குதித்தால் கண்ணுக்கு அழகு

******************************************

 2. கோவில்

*கோவில்களுக்குச் சென்று இறைவனைத் தரிசித்து வரலாம்.

* பண்டைய மன்னர்களின் கோவில் களை (கோ இல்லங்களைக்) கண்டால் கொண்டாட்டம்தான்.

******************************************

 3. வெங்காயம்

*வெங்காயம் உணவுக்கு அதிகம் பயன்படுகிறது

*உடலில் ஏற்பட்ட வெங்காயங்கள் உறுத்தலைக் கொடுத்தன.

******************************************

4. தலைமை 

*எங்கள் பள்ளி ஆண்டு விழாவிற்கு எங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தலைமை தாங்கினார்.

* தலை மை பூசுதல் கண்களுக்குக் கேடு விளைவிக்கும்.

12th Tamil Guide - Book back Question and answer

1 Comments

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2